நம்மில் பலருக்கு கணினி என்றால் அது விண்டோஸ் இயங்குதளதளம் தான். பள்ளி, கல்லூரி அல்லது தனியார் நிலையத்திலோ கணினி கற்கும் போது விண்டோஸ் இயங்குதளத்திலேயே கற்பதாலோ என்னவோ கணினி என்றால் அது விண்டோஸ் என்கின்ற மாயைக்குள் சிக்கிவிடுகின்றோம். விண்டோசில் இயங்கும் பல மென்பொருட்களையும் பயன்படுத்தி பழகிவிட்டால் அப்புறம் மீட்சியே கிடையாது. எடுத்துக்காட்டாக, இன்டநெட் எக்ஸ்புலோரர், ஸ்கைப், யாகூ மெசஞ்சர், அப்புறம் வேர்ட், எக்செல், பவர்பொயின்ட்… இவையில்லாமல் ஒரு கணினியை பலரால் நினத்துப்பார்க்கவே முடியாது. இவற்றைக் கடந்து ஒன்றுமில்லையா? ஏன் இல்லை இருக்கவே இருக்கிறது அப்பிளின் மகின்டோஷ்…. விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஏறக்குறைய எல்லா மென்பொருட்களுக்குமான மிகின்டோஷ் பதிப்புகள் கிடக்கின்றன. அப்பிள் கணினிகள் அழகானவை, புதிய தொழில்நுட்பத்தால் ஆனவை. ஆனால் மகின்டோஷ் இயங்குதளம் மகின்டோஷ் கணினியில் மட்டுமே இயங்கவல்லது. கதை வேற எங்கயோ போகுதேன்னு நினைப்பவர்கள் சற்று பொறுக்கவும். இப்பதானே விசயத்துக்கு வாரோம்.
விண்டோஸ், மகின்டோஷ் இவையிரண்டுமே காப்புரிமைக்குட்பட்ட இயங்குதளங்கள். சந்தையில் இயங்குதளத்தை மட்டும் வாங்குதாக இருந்தால் 100-200 அமெரிக்க டொலர் வரை ஆகிறது. கணினியுடன் வாங்கினால் 20-100 அமெரிக்க டொலர் ஆகலாம். (அதுதான் 10000 ருபா கணினி 11,240 ருபா ஆனது) இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஒரு கணினியையே 200 அமெரிக்க டொலருக்கு வாங்கும் போது இயங்குதளத்துக்கு இவ்வளவு செலவா? இங்கு விலைப்பற்றி நாம குறைக்கூறக்கூடாது. விண்டோசைப் பதிப்பிக்க ஆன செலவை இறுவட்டுக்களை விற்று பெற்றுக்கொள்கிறார் பில்கேட்ஸ் 🙂 (அது சரி ஆன செலவை சிடி வித்து சம்பாரிச்சா உலகத்திலேயே பெரிய பணக்காரனானது தாத்தாவுட்டு சொத்திலயா? டேய் அங்கென்ன சத்தம் முக்கியமான விசயம் பேசுரமுள்ள 😉 ) கொஞ்சம் பொறுங்க அண்ணாச்சி இந்தா விசயத்துக்குள்ள வந்த்துடோம்.
உபுண்டு பற்றி பல கேள்விகள், சந்தேகங்கள், வேண்டுமென்றே பிண்ணப்பட்ட கட்டுக்கதைகள் காரணமாக உபுண்டு மற்றும் அதையொத்த இயங்குதளங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையின்மை தொடர்கிறது. இப்பதிவில் சில அடிப்படைக் கேள்விகளைப் பார்ப்போம். தொடர்ந்துவரும் பதிவுகளில் இது தொடரும்.
1. உபுண்டுன்னா என்னா?
உபுண்டு என்பது கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களைக் கொண்ட டெபியன் லினக்சினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணினி இயங்குதளமாகும். அதாவது உபுண்டு காப்புரிமைக்குட்படுத்தப்படாத ஒரு இயங்குதளம்.இயங்குதளத்தோடேயே பல மொன்பொருட்களும் சேர்ந்து கொடுக்கப்படுகின்றன.
2. உபுண்டுவின் விலை?
உபுண்டுவின் விலை பூச்சியம் அதான்.. சைவர், சீரோ, …… இனாமாதான் கொடுக்கிறாங்க. 🙂
3. உபுண்டுவை எங்கிருந்து பெறுவது?
உபுண்டு இறுவட்டு வேண்டுமாயின் இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இருவட்டுக்கள் வந்தடைய 6-8 கிழமைகள் ஆகும். பொறுமையில்லாவிட்டால், நேரடி அல்லது டொரண்ட் தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம் உபுண்டுவைப் பெறுவது தொடர்பான எனது முந்தைய பதிவையும் பார்க்கவும்.
4. தரவிறக்கம் செய்து பாவிப்பது சட்டவிரோதமானதா?
இல்லை இது 100% சரியான செயல். குனு உரிமம்னா அதுதான்.
5. உபுண்டு லிலக்சில கறுப்பு ஸ்கிரினில எழுத்து மட்டுதான ஓடுமாமே?
யார் சொன்னது. உபுண்டுவில குனோம் என்கிற பயனர் இடைமுகம் உள்ளது. எடுத்துக்காட்டாக கீழே உள்ளது எனது உபுண்டு 9.04 பதிப்பின் ஒரு திரைக்காட்சியாகும்.

உபுண்டு 9.04 பதிப்பின் திரைக்காட்சி
6. உபுண்டுவில வேலைச் செய்ய பெரிய படிப்பு தேவையாமே?
உங்களால் விண்டோஸ் அல்லது மகின்டோசில் வேலைச் செய்ய முடியுமா அப்படியாயின் உபுண்டுவிலயும் வேலைச் செய்ய முடுயும்.
7. உபுண்டுவில வேர்ட், எக்செல் எல்லாம் கிடையாதாமே?
ஆம் வேர்ட் எக்செல் எல்லாம் மைகுரோ சொப்டின் காப்புரிமை மென்பொருட்கள் அவை உபுண்டுவில் இல்லை. ஆனால் அதையொத்த அதைவிட பலமான ஓபன் ஆபிஸ் உபுண்டுவுடன் வருகிறது. உபுண்டுவை நிறுவும் போதே இதுவும் நிறுவப்படுவதால் வேறு சீடி தேவையில்லை. மேலதிக தகவல்களுக்கு ஓப்பன் ஆபிஸ் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையையும் பாருங்க.
8. உபுண்டுவை கணினியில் நிறுவினா வின்டோஸ் அழிந்திடுமா?
உபுண்டு, மைகொரோ சாப்ட் விண்டோஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.
9. நான் விண்டோசில் பயன்படுத்திய மென்பொருட்களை உபுண்டுவில் பயன்படுத்த முடியுமா?
நேரடியாக முடியாது wine என்ற மென்பொருள் மூலம் விண்டோஸ் மென்பொருட்களை உபுண்டுவில் இயக்கிக் கொள்ளலாம்.
10. உபுண்டுவை கணினி நச்சுநிரல்கள் பாதிக்குமா?
லினக்ஸ் இயங்குதளங்கள் கணினி நச்சுநிரல்களிக்கு (computer viruses) நன்றாக ஈடுகொடுக்கக் கூடியவை. விண்டோஸ் இயங்குதளங்களைப் போல பாரிய நச்சுநிரல் பரம்பல்கள் உபுண்டுவில் இல்லை. எடுத்துக்காட்டாக 2005 இன் கடைசி 6 மாதங்களில் 11,000 நச்சுநிரல்கள் விண்டோஸ் இயங்குதளக்களத் தாக்கிய அதேவேலை லினக்ஸ் இயங்குதளங்களை 2005 ஆண்டு முழுவதுமே 863 நச்சு நிரல்களே தாக்கியுள்ளன. உபுண்டுவிற்கான நச்சுநிரல் எதிரிகள் (Anti Virus) உள்ளன அதில் ஒன்றை நிறுவுதல் போதுமானது.
உபுண்டு பற்றிய மேலதிக கேள்விகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.