ஜோன்டி ஜெக்போல் (Jaunty Jackalope)எனப்பெயரிடப்பட்ட உபுண்டு 9.04 பதிப்பு 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் வெளியிடப்படவு ள்ளது. குறைந்தளவு தொடக்க நேரம் கொண்டதாக இதனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது கனொனிகல் நிறுவனத்தின் பத்தாவது உபுண்டு வெளியீடாகும். தற்போது அல்பா நிலையைத் தாண்டி பீட்டா நிலையில் உள்ளது. உபுண்டு 9.04 பதிப்பிற்கான முழு நேரத் திட்டம் கீழே காட்டப்பட்டுள்ளது.
- நவம்பர் 20, 2008 – அல்பா 1 பதிப்பு
- டிசம்பர் 18, 2008 – அல்பா 2 பதிப்பு
- சனவரி 15, 2009 – அல்பா 3 பதிப்பு
- பெப்ரவரி 5, 2009 – அல்பா 4 பதிப்பு
- பெப்ரவரி 26, 2009 – அல்பா 5 பதிப்பு
- மார்ச் 12, 2009 – அல்பா 6 பதிப்பு
- மார்ச் 26, 2009 – பீட்டா பதிப்பு
- ஏப்ரல் 16, 2009 – Release Candidate
- ஏப்ரல் 23, 2009 – 9.04 இறுதி வெளியீடு
ஏனைய உபுண்டு வெளியீடுகளைப் போலவே இப்பதிப்பும் நேரடி இறுவட்டு(Live CD) , எழுத்துரு நிறுவலுக்கான இறுவட்டாக (Alternate Installer CD) வெளியிடப்படும். தற்போதைய பீட்டாப் பதிப்பில் சில வழுக்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. சில வழுக்களை எதிர் கொள்ள தயாரனவர்கள் இங்கிருந்து இறுவட்டின் ISO கோப்பைத் தரவிரக்கம் செய்துக் கொள்ளலாம். அல்லது ஏப்ரல் 23 வரைக் காத்திருந்து இந்தப் பக்கத்திலிருந்து 9.04 தெரிவுச் செய்து விருப்பமான வழங்கியையும் (Server) தெரிவுச் செய்து begin download என்பதை அழுத்தினால் தரவிறக்கம் தொடங்கும். உபுண்டு 8.10 வழுக்கள் குறைவாக (அல்லது இருந்தவைச் சரிசெய்யப்பட்டு) உள்ள ஒரு பதிப்பாகும். மேலும் உபுண்டு 8.10 க்கான சேவைகள் 2010 வரை தரப்படவுள்ளதால லிணக்சுக்கு புதியவர்கள் இப்பதிப்பினை தரவிரக்கம் செய்துக் கொள்ளலாம்.
தரவிரக்கிய ISO கோப்பை இறுவட்டில் பதிப்பது எப்படி என்பதை இங்கு காணலாம். இறுவட்டை இயண்றளவு குறைவான வேகத்தில் பதித்துக் கொள்ளவும். தரவிரக்கிய ISO மற்றும் பதிப்பித்த இறுவட்டு என்பவற்றை மூல கோப்புடன் ஒத்துள்ளதா என்பதை சரிபார்க்க MD5SUM செய்துக் கொள்ளவும். பிழைகள் ஏதுமில்லாத இடத்தில் கணினியை இறுவட்டுடன் மறு-தொடக்கம் (Reboot) செய்யவும். இப்போது நிறுவமாலேயே உங்கள் கணினியில் உபுண்டு தயார். வேண்டுமானால் திரையில் உள்ள நிறுவு (Install) என்பதை அழுத்தி கணினியிலும் நிறுவியும் பயன்படுத்தலாம். புதிய பதிப்பின் திரைக் காட்சிகளை கீழே காணலாம்.
[…] உபுண்டு இறுவட்டு வேண்டுமாயின் இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இருவட்டுக்கள் வந்தடைய 6-8 கிழமைகள் ஆகும். பொறுமையில்லாவிட்டால், நேரடி அல்லது டொரண்ட் தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம் உபுண்டுவைப் பெறுவது தொடர்பான எனது மு…. […]
புதிய உபுண்டு ப்ழைய பதிப்பை நீக்கி விடுமா?
விண்டோஸ்,லினக்ஸ் இரண்டையும் ஒரே கணினியில் பயன்படுத்த முடியுமா?