இலங்கைப் பற்றிய பதிவுகள் பெரும்பாலும் மனித உரிமை, போர் என்பவற்றையே சுற்றியே எழுதப்பட்டுவருகின்றன. ஒருவகையில் அது நியாயமானதுமானதுமாகும். ஆனால் அங்குள்ள வாடிக்கையாள நிலைமைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைச் செல்லும் போது அங்கே வாடிக்கையாளர் கவனிப்பு எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.
இங்க சப்பான்ல 105 யென் பொருளுக்கு 10,000 யென் நோட்ட நீட்டினாலும் சிரிச்ச முகத்தோட வாங்கிகிட்டு மிச்சகாச கொடுக்கிறானுங்க. காச கையில கொடுக்க முன்ன ஒரு முறை எண்ணிக்காட்டிவிட்டு ரசிதோடு கொடுக்கிறானுங்க. மிச்சம் ஒரு யென்னாக இருந்தாலும் கட்டாயம் தாரானுங்க. (இதுக்கும் ஒரு யென்னுக்கு ஒரு மிட்டாய் கூட வாங்க முடியாது). கடைக்கு போனா சிரித்த முகத்தோடு வறவேற்கிறார்கள். உண்மையாகவே வாடிக்கையாளர கடவுளா மதிக்கிறானுங்க.
இதுக்கெல்லாம் பழகீட்டு இலங்கைக்கு போனா அங்க 5 ருபாவுக்கு குறைய மிச்ச காசே கொடுக்கிறானில்ல. கேட்ட குடும்பத்தையே ரோட்டுக்கு இழுக்கிறான். பேருந்தில பற்றுச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும் அவன் நினைச்சா கொடுக்கிறான் இல்லாட்டி விடுறான் யாரும் கேட்க முடியாது. பேருந்த இடையில நிறுத்திவிட்டு இதுக்குமேல போகாது வேற பேருந்தில போகச் சொல்கிறான். 30 கிலோமீட்டர் தூரத்தை 4 மணித்தியாலமா போறான். கேட்டா இறங்கி நடக்கச் சொல்கிறான்.
பேருதில இப்படினூன்னா கடைக்கு போனா அவனுங்க இம்ச வேறுவிதமாக இருக்கும். காசளரா இருக்கிறவருடைய முகத்தை பார்த்தா அன்றை நாளே அவ்வளவுதான். முகம் அப்படி இருக்கும். மிச்ச காச அவன் குடுக்காம எங்ககிட்ட சில்லறையை குடுகுடுன்னு உயிரை எடுப்பான். அவ்வளவு பேர் வந்துபோற இடத்துலையே மிச்சத்துக்கு சில்லறை இல்லன்னா எங்ககிட்ட ஏதுயா சில்லறை.
இத எழுதுவதால அங்க ஒன்னுமே நடக்காது என்பது தெரிந்தாலும் ஏதோ எனது வயிற்றெரிச்சலை பதிந்து வைக்கிறேன். மத்தபடி சப்பான்ல எல்லாம் சரியா நடக்குது இலங்கையில எல்லாம் பிழைன்னு சொல்ல வரலை.
மறுமொழியொன்றை இடுங்கள்