சப்போரோ, யப்பான் 2008:ஐனு நெகி யென்றால் ஒருவகை கீரை வெள்ளைப்பூடுக் குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியற் பெயர் Allium victorialis subsp. platyphyllum என்பதாகும். இங்கே சென்று பார்தால் இதன் படிமத்தைக் காணலாம். இது குளிர்பருவம் முடிவடைந்தவுடன் மலைகளில் தோன்றும் நிலத்தடியில் காணப்படும் கிழங்கு மூலமாக இனத்தைப் பரப்புகின்றன.யப்பனிய மொழியில் நெகி என்றால் வெங்காயம் எனப்பொருள்படும் ஐனு என்பது இங்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியினராவர்
ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை 26 ஆம் நாள் இங்கே ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் 4 பேர் யப்பனியகள் மூவருடன் இணைந்த்து மலையில் வளரும் ஐனு நெகி எனப்பட்ட ஒருவகை கீரையை பறிக்க சென்றோம். யப்பானின் 4 முக்கிய தீவுகளில் ஆகவும் வடக்காக அமைந்துள்ள ஒக்கைடோ தீவு கிட்டத்தட்ட இலங்கைத் தீவின் அளவைக் கொண்டதாகும். தீவு மக்கள் செறிவு குறைந்தது இங்கு காணப்படும் குளிர் காலநிலை இதற்கு முக்கிய காரணமாகும். இதன் தலை நகரம் சப்போரோ இங்கிருந்து தான் எமது பயணம் தொடங்கியது. சுமார் 2 மணித்தியால பயணத்தின் பின்னர் சுசுட்சு என்பட்ட சிறிய கடலோர கிரமாத்தை அடைந்தோம். அங்கிருந்து சிறு தூரம் தீவுக்குள்ளாகச் செல்ல ஏறவேண்டிய மலை வந்தாகியது.
முதலில் மலையுள் செல்லும் போது இலகுவாகத்தான இருந்தது…ஓரளவிற்கு மெதுவான ஏற்றம் சிறிய பாதையொன்றும் காணப்பட்டது.
மலைன்னு சொன்னாங்க ஒன்னையும் கானோம்…
சிறிது தூரம் சென்றவுடன் அண்மையில் கரடிகள் ஏதுமிருப்பின் அவற்றை துரத்திவிடுவதற்கு வெடி கொழுத்தி போட்டார் எங்களுடன் வந்த யப்பானியர் ஒருவர். காட்டிற்குள் தைரிமாக போனதே இந்த யப்பானியர் இருக்கும் நம்பிக்கையில் தான். உள்ளே சென்றதும் தான் சொன்னா அவர் அன்று அவர் தனது வேட்டை துப்பாக்கியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்த விதயத்தை. :-().
கரடி வரும் கவனம்!!!!!!!
சிறுகசிறுக காட்டிற்குள் சென்றவுடன் பாதையும் இல்லமலேயே போனது…. மிகக் கடினப்பட்டு ஏற்வேண்டியதாயிற்று. ஒருவருமே பொருத்தமான உடைகளை அணிந்து வந்திருக்கவில்லை இது எமது பயணத்தை மேலும் கடிமாக்கியது.
நண்பர் இலக்கினேசுவரன் கடினமான மலைப்பாதையில் ஏறும் காட்சி
மிகச் சரிவான மலையில் சிறு தூரம் ஏறியதுமே ஐனு நெகி எனப்பட்ட கீரையை காணக்கூடியதாக இருந்தது. ஏற்கணவே கொண்டுவந்திருது சிறு கத்திகளால் அவற்றை வெட்டி பாலிதீன் பைகளில் சேகரிக்க தொடங்கினோம்.சுமார் ஒரு மணித்தியாலம் அளவு அங்குமிங்குமாக பரவிக் கிடந்த ஐனு நெகியை சேகரித்த பின்னர். மறுபடியும் எமது ஊர்திக்கு திரும்பினோம். அன்றிரவு உணவில் ஐனு நெகியை உண்டு மகிழ்ந்தோம்.
ஐனு நெகி பறிப்பில் ஈடுபட்ட குழுவினர். பறித்த ஐனு நெகியுடன்
ஐனு நெகி சமைக்கப்படுகிறது (பச்சை நிறத்திலிருப்பது)
மறுமொழியொன்றை இடுங்கள்