Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

இணையத்தில் அதிகளவு பயன்படுத்தப்படும் தமிழ் செய்தி இணையத்தளங்களில் முதன் 5 இடங்களைப் பிடித்த இணையத்தளங்களை இப்பதிவில் பார்க்கலாம். எதிர்பாக்கக்கூடியவாரே இந்திய செய்தி இணையத்தளங்களே முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இவற்றைக் கணிப்பிட அலெக்சா.காம் தரவுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். மூன்று மாத தரங்களின் சராசரியைக் கொண்டே

தமிழ் இணையங்களில் தரம் 1

  • Dinamalar.com
  • உலக தரம்: 2,669
  • வகை:செய்தி

அரசியல், கோர்ட், உலகம், வர்த்தகம், விளையாட்டு, மாவட்ட செய்திகள் ,தமிழக சிறப்பு செய்திகள், ஜோசியம் போன்ற தலைப்புக்களில் செய்திகள் வழங்கப்படுகின்றன. கூடுதலான வாசகர்கள் இந்தியாவிலிருந்து வருகின்றனர். சில பிளாஷ் விளம்பரங்கள் தளத்தில் உள்ளன. தளத்தில் யுனிகோட் எழுத்துருக்களை பாவிப்பது வாசகர்களுக்கு எழுத்துருவை நிறுவும் சிக்கலை தவிர்க்கிறது. பயர்பாக்சிலும் நன்றாக வேலைச் செய்கிறது.

தமிழ் இணையங்களில் தரம் 2

தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் செய்திகள் கொடுக்கப்படுகின்றன. எனவே உலக தரத்தில் மிக அதிமாக இருந்தாலும் தமிழ் இணையங்களில் தரத்தில் இரண்டாம் இடத்தை பெறுகிறது. குறைந்தளவு பிளாஷ் விளம்பரங்களே தளத்தில் உள்ளன. தளத்தில் யுனிகோட் எழுத்துருக்களை பாவிப்பது வாசகர்களுக்கு எழுத்துருவை நிறுவும் சிக்கலை தவிர்க்கிறது. பயர்பாக்சிலும் நன்றாக வேலைச் செய்கிறது. இலவச ஈ-மெயில் வசதியும் இன்கே கிடைக்கிறது.

தமிழ் இணையங்களில் தரம் 3

தமிழ், ஆங்கில மொழிகளில் செய்திகள் தரப்படுகின்றன. இவ்விணையம் யுனிகோட் தவிர்ந்த ஒரு எழுத்துருவை பயன்படுத்துகிறது. இன்டனெட் எக்ஸ்புலோரர் இல்லாவிட்டால் பார்க்க முடியாதிருப்பது ஒரு சிக்கலாகும்.தளத்தில் அதிகளவு பிளாஷ் விளம்பரங்களும், பொப்- அப் விளம்பரங்களும் இத்தளத்தில் இருக்கும் போது இம்சையாக இருக்கிறது. தவிர இவ்விணையம் யுனிகோட் தவிர்ந்த ஒரு எழுத்துருவை பயன்படுத்துகிறது.

தமிழ் இணையங்களில் தரம் 4

  • Dinakaran.com
  • உலக தரம்: 4,544
  • வகை:செய்தி

தமிழில் செய்திகள் தரும் இணையத்தளம் ஈ-பேப்பர் வசதியும் கிடைக்கிறது. தளத்தில் அதிகளவு பிளாஷ் விளம்பரங்களும், பொப்- அப் விளம்பரங்களும் இத்தளத்தில் இருக்கும் போது இம்சையாக இருக்கிறது. தவிர இவ்விணையம் யுனிகோட் தவிர்ந்த ஒரு எழுத்துருவை பயன்படுத்துகிறது. இன்டனெட் எக்ஸ்புலோரர் இல்லாவிட்டால் பார்க்க முடியாதிருப்பது ஒரு சிக்கலாகும்.

தமிழ் இணையங்களில் தரம் 5

  • Dinamani.com
  • உலக தரம்: 6,600
  • வகை: செய்தி

தமிழில் செய்திகள் தரும் இணையத்தளம் ஈ-பேப்பர் வசதியும் கிடைக்கிறது. தினகரன் போன்றல்லாது பதிவுச் செய்யாமலேயே ஈ- பேப்பர் வசதியை பயன்படுத்தலாம்.  தளத்தில் அதிகளவு பிளாஷ் விளம்பரங்களும், பொப்- அப் விளம்பரங்களும் இத்தளத்தில் இருக்கும் போது இம்சையாக இருக்கிறது. தவிர இவ்விணையம் யுனிகோட் தவிர்ந்த ஒரு எழுத்துருவை பயன்படுத்துகிறது. இன்டனெட் எக்ஸ்புலோரர் இல்லாவிட்டால் பார்க்க முடியாதிருப்பது ஒரு சிக்கலாகும்.

கடைசிக்குறிப்புகள்

தமிழ் இணையங்களில் முதலிடத்திலிருக்கும் இதுபோன்ற இணையத்தளங்கள் அதிகளவு பிளாஷ் விளம்பரங்களையும், பொப்- அப் விளம்பரங்களையும் குறைத்துக்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

யுனிகோட் எழுத்துருவில் இணையத்தை வழங்குவது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இன்டநெட் எக்புலோரர் தவிர்ந்த ஏனைய இணைய உலாவிகளிலும் வேலைச் செய்யும் வகையில் இணையத்தளங்களை புதுப்பிப்பது அவசியமாகும்.

1. நெகிழக்கூடிய காந்தம்

காந்தம் என்றால் வன்மையாக இருக்கும்.  இது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும் ஆனால் gel-magnet மென்மையாக இருக்கிறதாம்.

2. சட்டைப்பைக்குள் அடங்கக் கூடிய 10 அடி நீள தடி.

அமெரிக்க இராணுவ வீரர்கள் இப்போது பயன்டுத்துகிறார்கள்.

3. உலர் தண்மையக் கொண்ட திரவம்.

நீரைவிட 25 மடங்கு வேகமாக ஆவியாவதல் “உலர்” தண்மையக் கொண்டுள்ளது. காரியாலங்களில் தீயணைப்புக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

4. உலோகங்களைப் போல shape retain பன்னக்கூடிய நெகிழி.

நெகிழிகளுக்கு பொதுவாக ஒரு விசைஅயக் கொடுத்தால் அது நெகிழும் பின்னர்  அது பழைய நிலைக்கே திரும்பும் ஆனால் இது அப்படியல்ல.

5.  காகிதத்தில் வலைவுக்கேற்ப மின்காவுதிறனை மாற்றும் மை.

இதன் மூலம் மை பாவிக்கப்பட்டுள்ள பல இடங்களில் புதிய சேவைகளப் பெறலாம்.

6. மணம் அல்லது நாற்றத்துகேற்ப நிறம்மாறும் லேபில்கள்.

உணவு பழுதடைந்துள்ளாதா என்பதைக் காட்டக்கூடிய லேபில்கள். இவை மருத்துவ துறையிலும் பயன்படுத்தக்கூடியன.

இவைப்பற்றிய மேலும் விபரங்களை இந்த கானொளியின் கண்டுகொள்ளலாம்.

icon_ccமேலுள்ள கானொளி கிரியேடிவ் காமன்சு – அட்ரிபியூசன் – நன் கமார்சியல் – நோ டெரிவடிவ் அளிப்புரிமை 3.0 பதிப்பில் கீழ் வழங்கப்படுகிறது.

கிழே கொடுக்கப்பட்டுள்ளவை இணையத்தில் பயன் தரக்கூடிய தளங்களின் பட்டியல் ஆகும். இங்கு பட்டியலிடப்பட்ட இணையத்தளங்கள் இலவச சேவைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

1. மென்பொருள் தரவிறக்கம்

இணையத்தில் இலவசமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய (Download free software)

2. தொடர்பாடல்

  • இலங்கைக்கு இலவச குறுஞ்சொல் செய்தி (Free SMS to Sri Lanka) அனுப்பிட
  • Voip சேவை வழங்கும் இணையதளங்கள்
    • பொய்வீ Poivy.com (கணனி-கணினி பேச்சு மட்டுமே இலவசம், கணினி – தொலைப்பேசி இணைப்புகள் குறைந்த கட்டணத்தில்)
    • சுமார்ட் வொயிப் Smart-voip-solution.com (கணனி-கணினி பேச்சு மட்டுமே இலவசம், கணினி – தொலைப்பேசி இணைப்புகள் குறைந்த கட்டணத்தில்)

3.செய்திகள் உடனுக்க்குடன் இற்றைப்படுத்தும் இணையத்தளங்கள்

  • அனைத்துலக செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள Reuters.com (ஆங்கிலம்)
  • இலங்கைப் பற்றிய செய்திகள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும் தளம்  Dailymirror.lk (ஆங்கிலம்)
  • இலங்கைப் பற்றிய செய்திகள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும் தமிழ் தளம் Puthinam.com (தமிழ்)
  • இலங்கைப் பற்றிய செய்திகள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும் தமிழ் தளம் Tamilwin.com (தமிழ்)
  • இலங்கைப் பற்றிய செய்திகள் Globaltamilnews.net (தமிழ், சிங்களம், ஆங்கிலம்)

4. சுவாரசியமான பேச்சுக்களை கேட்டு மகிழ

  • ஆண்டுதோறும் நடபெறும்  டெட்  (TED அல்லது Technology, Entertainment, Design) கருத்தரங்கில் ஆற்றப்பட்ட 200க்கும் மேற்பட்ட பேச்சுக்கள் TED.com (ஆங்கிலம்)
  • யூடியூப் கூகில் Youtube.com/google (ஆங்கிலம்)

5. இணைய நூலகங்கள்/கலைக்களஞ்சியங்கள்

  • விக்கிபீடியா ta.wikipedia.org
  • மதுரை திட்டம் pm.tamil.net
  • கட்டர்ன்பர்க் திட்டம் Gutenberg.org
  • இணையஆகரமுதலி ta.wiktionary.org
  • நூலகம் noolaham.net 2,800 க்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (இதை எப்படி முதலில் தவறவிட்டே னோ 😦 )

6.  விளையாட்டு

7. ஏனைய

  • அடிக்கடி பயன்படுத்தும் இணையத்தளங்களைக் கொண்டு ஒரு முதற்பக்கத்தை ஆக்கிக் கொள்ள only2clicks.com
  • இணைய திரைப்பட தரவுத்தளம் imdb.com
  • மொழிப்பெயர்ப்புகளுக்கு babelfish.yahoo.com
  • நண்பர்களுடன் தொடர்பிலிருக்க facebook.com
  • எவ்வற்றை எப்படி செய்வது தொடபாக பல கானொளிகள் wonderhowto.com

8.  எழுத்துருக்கள்

  • இணையத்திலிருந்து தமிழில் எழுத மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றங்களைச் செய்ய Suratha.com

9. தமிழ் இணைய வானொலிகள்

நம்மில் பலருக்கு கணினி என்றால் அது விண்டோஸ் இயங்குதளதளம் தான். பள்ளி, கல்லூரி அல்லது தனியார் நிலையத்திலோ கணினி கற்கும் போது விண்டோஸ் இயங்குதளத்திலேயே கற்பதாலோ என்னவோ கணினி என்றால் அது விண்டோஸ் என்கின்ற மாயைக்குள் சிக்கிவிடுகின்றோம். விண்டோசில் இயங்கும் பல மென்பொருட்களையும் பயன்படுத்தி பழகிவிட்டால் அப்புறம் மீட்சியே கிடையாது. எடுத்துக்காட்டாக, இன்டநெட் எக்ஸ்புலோரர், ஸ்கைப், யாகூ மெசஞ்சர், அப்புறம் வேர்ட், எக்செல், பவர்பொயின்ட்… இவையில்லாமல் ஒரு கணினியை பலரால் நினத்துப்பார்க்கவே முடியாது. இவற்றைக் கடந்து ஒன்றுமில்லையா? ஏன் இல்லை இருக்கவே இருக்கிறது அப்பிளின் மகின்டோஷ்…. விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஏறக்குறைய எல்லா மென்பொருட்களுக்குமான மிகின்டோஷ் பதிப்புகள் கிடக்கின்றன. அப்பிள் கணினிகள் அழகானவை, புதிய தொழில்நுட்பத்தால் ஆனவை. ஆனால் மகின்டோஷ் இயங்குதளம் மகின்டோஷ் கணினியில் மட்டுமே இயங்கவல்லது. கதை வேற எங்கயோ போகுதேன்னு நினைப்பவர்கள் சற்று பொறுக்கவும். இப்பதானே விசயத்துக்கு வாரோம்.

விண்டோஸ், மகின்டோஷ் இவையிரண்டுமே காப்புரிமைக்குட்பட்ட இயங்குதளங்கள். சந்தையில் இயங்குதளத்தை மட்டும் வாங்குதாக இருந்தால் 100-200 அமெரிக்க டொலர் வரை ஆகிறது. கணினியுடன் வாங்கினால் 20-100 அமெரிக்க டொலர் ஆகலாம். (அதுதான் 10000 ருபா கணினி 11,240 ருபா ஆனது) இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஒரு கணினியையே 200 அமெரிக்க டொலருக்கு வாங்கும் போது இயங்குதளத்துக்கு இவ்வளவு செலவா?  இங்கு விலைப்பற்றி நாம குறைக்கூறக்கூடாது. விண்டோசைப் பதிப்பிக்க ஆன செலவை இறுவட்டுக்களை விற்று பெற்றுக்கொள்கிறார் பில்கேட்ஸ் 🙂 (அது சரி ஆன செலவை சிடி வித்து சம்பாரிச்சா உலகத்திலேயே பெரிய பணக்காரனானது தாத்தாவுட்டு சொத்திலயா? டேய் அங்கென்ன சத்தம் முக்கியமான விசயம் பேசுரமுள்ள 😉 ) கொஞ்சம் பொறுங்க அண்ணாச்சி இந்தா விசயத்துக்குள்ள வந்த்துடோம்.

உபுண்டு பற்றி பல கேள்விகள், சந்தேகங்கள், வேண்டுமென்றே பிண்ணப்பட்ட கட்டுக்கதைகள் காரணமாக உபுண்டு மற்றும் அதையொத்த இயங்குதளங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையின்மை தொடர்கிறது. இப்பதிவில் சில அடிப்படைக் கேள்விகளைப் பார்ப்போம். தொடர்ந்துவரும் பதிவுகளில் இது தொடரும்.

1. உபுண்டுன்னா என்னா?

உபுண்டு என்பது  கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களைக் கொண்ட  டெபியன் லினக்சினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணினி இயங்குதளமாகும். அதாவது உபுண்டு காப்புரிமைக்குட்படுத்தப்படாத ஒரு இயங்குதளம்.இயங்குதளத்தோடேயே பல மொன்பொருட்களும் சேர்ந்து கொடுக்கப்படுகின்றன.

2. உபுண்டுவின் விலை?

உபுண்டுவின் விலை பூச்சியம் அதான்.. சைவர், சீரோ, …… இனாமாதான் கொடுக்கிறாங்க. 🙂

3. உபுண்டுவை எங்கிருந்து பெறுவது?

உபுண்டு இறுவட்டு வேண்டுமாயின் இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இருவட்டுக்கள் வந்தடைய 6-8 கிழமைகள் ஆகும்.  பொறுமையில்லாவிட்டால், நேரடி அல்லது டொரண்ட் தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்  உபுண்டுவைப் பெறுவது தொடர்பான எனது முந்தைய பதிவையும் பார்க்கவும்.

4. தரவிறக்கம் செய்து பாவிப்பது சட்டவிரோதமானதா?

இல்லை இது 100% சரியான செயல். குனு உரிமம்னா அதுதான்.

5. உபுண்டு லிலக்சில கறுப்பு ஸ்கிரினில எழுத்து மட்டுதான ஓடுமாமே?

யார் சொன்னது. உபுண்டுவில குனோம் என்கிற பயனர் இடைமுகம் உள்ளது. எடுத்துக்காட்டாக கீழே உள்ளது எனது உபுண்டு 9.04 பதிப்பின் ஒரு திரைக்காட்சியாகும்.

உபுண்டு 9.04 பதிப்பின் திரைக்காட்சி

உபுண்டு 9.04 பதிப்பின் திரைக்காட்சி

6. உபுண்டுவில வேலைச் செய்ய பெரிய படிப்பு தேவையாமே?

உங்களால் விண்டோஸ் அல்லது மகின்டோசில் வேலைச் செய்ய முடியுமா அப்படியாயின் உபுண்டுவிலயும் வேலைச் செய்ய முடுயும்.

7. உபுண்டுவில வேர்ட், எக்செல் எல்லாம் கிடையாதாமே?

ஆம் வேர்ட் எக்செல் எல்லாம் மைகுரோ சொப்டின் காப்புரிமை மென்பொருட்கள் அவை உபுண்டுவில் இல்லை. ஆனால் அதையொத்த அதைவிட பலமான ஓபன் ஆபிஸ் உபுண்டுவுடன் வருகிறது. உபுண்டுவை நிறுவும் போதே இதுவும் நிறுவப்படுவதால் வேறு சீடி தேவையில்லை. மேலதிக தகவல்களுக்கு ஓப்பன் ஆபிஸ் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையையும் பாருங்க.

8. உபுண்டுவை கணினியில் நிறுவினா வின்டோஸ் அழிந்திடுமா?

உபுண்டு, மைகொரோ சாப்ட் விண்டோஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

9. நான் விண்டோசில் பயன்படுத்திய மென்பொருட்களை உபுண்டுவில் பயன்படுத்த முடியுமா?

நேரடியாக முடியாது wine என்ற மென்பொருள் மூலம் விண்டோஸ் மென்பொருட்களை உபுண்டுவில் இயக்கிக் கொள்ளலாம்.

10. உபுண்டுவை கணினி நச்சுநிரல்கள் பாதிக்குமா?

லினக்ஸ் இயங்குதளங்கள் கணினி நச்சுநிரல்களிக்கு (computer viruses) நன்றாக ஈடுகொடுக்கக் கூடியவை. விண்டோஸ் இயங்குதளங்களைப் போல பாரிய நச்சுநிரல் பரம்பல்கள் உபுண்டுவில் இல்லை. எடுத்துக்காட்டாக 2005 இன் கடைசி 6 மாதங்களில் 11,000 நச்சுநிரல்கள் விண்டோஸ் இயங்குதளக்களத் தாக்கிய அதேவேலை லினக்ஸ் இயங்குதளங்களை 2005 ஆண்டு முழுவதுமே 863 நச்சு நிரல்களே தாக்கியுள்ளன. உபுண்டுவிற்கான நச்சுநிரல் எதிரிகள் (Anti Virus) உள்ளன அதில் ஒன்றை நிறுவுதல் போதுமானது.

உபுண்டு பற்றிய மேலதிக கேள்விகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உபுண்டு 9.04

ஜோன்டி ஜெக்போல் (Jaunty Jackalope)எனப்பெயரிடப்பட்ட உபுண்டு 9.04 பதிப்பு 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் வெளியிடப்படவு ள்ளது. குறைந்தளவு தொடக்க நேரம் கொண்டதாக இதனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது கனொனிகல் நிறுவனத்தின் பத்தாவது உபுண்டு வெளியீடாகும். தற்போது அல்பா நிலையைத் தாண்டி பீட்டா நிலையில் உள்ளது. உபுண்டு 9.04 பதிப்பிற்கான முழு நேரத் திட்டம் கீழே காட்டப்பட்டுள்ளது.

  • நவம்பர் 20, 2008 – அல்பா 1 பதிப்பு
  • டிசம்பர் 18, 2008 – அல்பா 2 பதிப்பு
  • சனவரி 15, 2009 – அல்பா 3 பதிப்பு
  • பெப்ரவரி 5, 2009 – அல்பா 4 பதிப்பு
  • பெப்ரவரி 26, 2009 – அல்பா 5 பதிப்பு
  • மார்ச் 12, 2009 – அல்பா 6 பதிப்பு
  • மார்ச் 26, 2009 – பீட்டா பதிப்பு
  • ஏப்ரல் 16, 2009 – Release Candidate
  • ஏப்ரல் 23, 2009 – 9.04  இறுதி வெளியீடு

ஏனைய உபுண்டு வெளியீடுகளைப் போலவே இப்பதிப்பும் நேரடி இறுவட்டு(Live CD) , எழுத்துரு நிறுவலுக்கான இறுவட்டாக (Alternate Installer CD) வெளியிடப்படும். தற்போதைய பீட்டாப் பதிப்பில் சில வழுக்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. சில வழுக்களை எதிர் கொள்ள தயாரனவர்கள் இங்கிருந்து இறுவட்டின் ISO கோப்பைத் தரவிரக்கம் செய்துக் கொள்ளலாம். அல்லது ஏப்ரல் 23 வரைக் காத்திருந்து இந்தப் பக்கத்திலிருந்து 9.04 தெரிவுச் செய்து விருப்பமான வழங்கியையும் (Server) தெரிவுச் செய்து begin download என்பதை அழுத்தினால் தரவிறக்கம் தொடங்கும். உபுண்டு 8.10 வழுக்கள் குறைவாக (அல்லது இருந்தவைச் சரிசெய்யப்பட்டு) உள்ள ஒரு பதிப்பாகும். மேலும் உபுண்டு 8.10 க்கான சேவைகள் 2010 வரை தரப்படவுள்ளதால லிணக்சுக்கு புதியவர்கள்  இப்பதிப்பினை தரவிரக்கம் செய்துக் கொள்ளலாம்.

தரவிரக்கிய ISO கோப்பை இறுவட்டில் பதிப்பது எப்படி என்பதை இங்கு காணலாம். இறுவட்டை இயண்றளவு குறைவான வேகத்தில் பதித்துக் கொள்ளவும். தரவிரக்கிய ISO மற்றும் பதிப்பித்த இறுவட்டு என்பவற்றை மூல கோப்புடன் ஒத்துள்ளதா என்பதை சரிபார்க்க MD5SUM செய்துக் கொள்ளவும். பிழைகள் ஏதுமில்லாத இடத்தில் கணினியை இறுவட்டுடன் மறு-தொடக்கம் (Reboot) செய்யவும். இப்போது நிறுவமாலேயே உங்கள் கணினியில் உபுண்டு தயார். வேண்டுமானால் திரையில் உள்ள நிறுவு (Install) என்பதை அழுத்தி கணினியிலும் நிறுவியும் பயன்படுத்தலாம். புதிய பதிப்பின் திரைக் காட்சிகளை கீழே காணலாம்.

இலங்கைப் பற்றிய பதிவுகள் பெரும்பாலும் மனித உரிமை, போர் என்பவற்றையே சுற்றியே எழுதப்பட்டுவருகின்றன. ஒருவகையில் அது நியாயமானதுமானதுமாகும்.  ஆனால் அங்குள்ள வாடிக்கையாள நிலைமைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைச் செல்லும் போது அங்கே வாடிக்கையாளர் கவனிப்பு எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.

இங்க சப்பான்ல 105 யென் பொருளுக்கு 10,000 யென் நோட்ட நீட்டினாலும் சிரிச்ச முகத்தோட வாங்கிகிட்டு மிச்சகாச கொடுக்கிறானுங்க. காச கையில கொடுக்க முன்ன ஒரு முறை எண்ணிக்காட்டிவிட்டு ரசிதோடு கொடுக்கிறானுங்க. மிச்சம் ஒரு யென்னாக இருந்தாலும் கட்டாயம் தாரானுங்க. (இதுக்கும் ஒரு யென்னுக்கு ஒரு மிட்டாய் கூட வாங்க முடியாது).  கடைக்கு போனா சிரித்த முகத்தோடு வறவேற்கிறார்கள். உண்மையாகவே வாடிக்கையாளர கடவுளா மதிக்கிறானுங்க.

இதுக்கெல்லாம் பழகீட்டு இலங்கைக்கு போனா அங்க 5 ருபாவுக்கு குறைய மிச்ச காசே கொடுக்கிறானில்ல. கேட்ட குடும்பத்தையே ரோட்டுக்கு இழுக்கிறான். பேருந்தில பற்றுச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும் அவன் நினைச்சா கொடுக்கிறான் இல்லாட்டி விடுறான் யாரும் கேட்க முடியாது.  பேருந்த இடையில நிறுத்திவிட்டு இதுக்குமேல போகாது வேற பேருந்தில போகச் சொல்கிறான்.  30 கிலோமீட்டர் தூரத்தை 4 மணித்தியாலமா போறான். கேட்டா இறங்கி நடக்கச் சொல்கிறான்.

பேருதில இப்படினூன்னா கடைக்கு போனா அவனுங்க இம்ச வேறுவிதமாக இருக்கும். காசளரா இருக்கிறவருடைய முகத்தை பார்த்தா அன்றை நாளே அவ்வளவுதான். முகம் அப்படி இருக்கும். மிச்ச காச அவன் குடுக்காம எங்ககிட்ட சில்லறையை குடுகுடுன்னு உயிரை எடுப்பான். அவ்வளவு பேர் வந்துபோற இடத்துலையே மிச்சத்துக்கு சில்லறை இல்லன்னா எங்ககிட்ட ஏதுயா சில்லறை.

இத எழுதுவதால அங்க ஒன்னுமே நடக்காது என்பது தெரிந்தாலும் ஏதோ எனது வயிற்றெரிச்சலை பதிந்து வைக்கிறேன். மத்தபடி சப்பான்ல எல்லாம் சரியா நடக்குது இலங்கையில எல்லாம் பிழைன்னு சொல்ல வரலை.

சப்போரோ, யப்பான் 2008:ஐனு நெகி யென்றால் ஒருவகை கீரை வெள்ளைப்பூடுக் குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியற் பெயர் Allium victorialis subsp. platyphyllum என்பதாகும். இங்கே சென்று பார்தால் இதன் படிமத்தைக் காணலாம். இது குளிர்பருவம் முடிவடைந்தவுடன் மலைகளில் தோன்றும் நிலத்தடியில் காணப்படும் கிழங்கு மூலமாக இனத்தைப் பரப்புகின்றன.யப்பனிய மொழியில் நெகி என்றால் வெங்காயம் எனப்பொருள்படும் ஐனு என்பது இங்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியினராவர்

ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை 26 ஆம் நாள் இங்கே ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் 4 பேர் யப்பனியகள் மூவருடன் இணைந்த்து மலையில் வளரும் ஐனு நெகி எனப்பட்ட ஒருவகை கீரையை பறிக்க சென்றோம்.  யப்பானின் 4 முக்கிய தீவுகளில் ஆகவும் வடக்காக அமைந்துள்ள ஒக்கைடோ தீவு கிட்டத்தட்ட இலங்கைத் தீவின் அளவைக் கொண்டதாகும். தீவு மக்கள் செறிவு குறைந்தது இங்கு காணப்படும் குளிர் காலநிலை இதற்கு முக்கிய காரணமாகும். இதன் தலை நகரம் சப்போரோ இங்கிருந்து தான் எமது பயணம் தொடங்கியது.  சுமார் 2 மணித்தியால பயணத்தின் பின்னர் சுசுட்சு என்பட்ட சிறிய கடலோர கிரமாத்தை அடைந்தோம். அங்கிருந்து சிறு தூரம் தீவுக்குள்ளாகச் செல்ல ஏறவேண்டிய மலை வந்தாகியது.

முதலில் மலையுள் செல்லும் போது இலகுவாகத்தான இருந்தது…ஓரளவிற்கு மெதுவான ஏற்றம் சிறிய பாதையொன்றும் காணப்பட்டது.

மலைன்னு சொன்னாங்க ஒன்னையும் கானோம்…

சிறிது தூரம் சென்றவுடன் அண்மையில் கரடிகள் ஏதுமிருப்பின் அவற்றை துரத்திவிடுவதற்கு வெடி கொழுத்தி போட்டார் எங்களுடன் வந்த யப்பானியர் ஒருவர். காட்டிற்குள் தைரிமாக போனதே இந்த யப்பானியர் இருக்கும் நம்பிக்கையில் தான். உள்ளே சென்றதும் தான் சொன்னா அவர் அன்று அவர் தனது வேட்டை துப்பாக்கியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்த விதயத்தை. :-().

கரடி வரும் கவனம்!!!!!!!

சிறுகசிறுக காட்டிற்குள் சென்றவுடன் பாதையும் இல்லமலேயே போனது…. மிகக் கடினப்பட்டு ஏற்வேண்டியதாயிற்று. ஒருவருமே பொருத்தமான உடைகளை அணிந்து வந்திருக்கவில்லை இது எமது பயணத்தை மேலும் கடிமாக்கியது.

நண்பர் இலக்கினேசுவரன் கடினமான மலைப்பாதையில் ஏறும் காட்சி

மிகச் சரிவான மலையில் சிறு தூரம் ஏறியதுமே ஐனு நெகி எனப்பட்ட கீரையை காணக்கூடியதாக இருந்தது. ஏற்கணவே கொண்டுவந்திருது சிறு கத்திகளால் அவற்றை வெட்டி பாலிதீன் பைகளில் சேகரிக்க தொடங்கினோம்.சுமார் ஒரு மணித்தியாலம் அளவு அங்குமிங்குமாக பரவிக் கிடந்த ஐனு நெகியை சேகரித்த பின்னர். மறுபடியும் எமது ஊர்திக்கு திரும்பினோம். அன்றிரவு உணவில் ஐனு நெகியை உண்டு மகிழ்ந்தோம்.

ஐனு நெகி பறிப்பில் ஈடுபட்ட குழுவினர். பறித்த ஐனு நெகியுடன்

ஐனு நெகி சமைக்கப்படுகிறது

ஐனு நெகி சமைக்கப்படுகிறது (பச்சை நிறத்திலிருப்பது)

நான் தமிழ் இலக்கண விதிகளை மீள படிக்கத் தொடங்கிய வேலை எடுத்த சுறுக்கக் குறிப்புகளை தொகுத்து தருகிறேன். பிழைகள் காணப்படலாம் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். தமிழ் இலக்கணத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான திரிதல் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு.

வகை 1: முன்வரும் சொல் மெய்யெலுழுத்தில் முடிந்து அடுத்தச் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால்:

கடைசி மெய்யெழுத்து + முதல் உயிரெலுத்து=உயிர்மெய் என்றவாறு உயிர் மெய்யெழுத்து உருவாகும். இரண்டு சொற்களும் இணையும்.

எ+கா:

  • மெய் + எழுத்து = மெய்யெழுத்து (ய்+எ===> யெ)
  • கோபம் + உள்ள = கோபமுள்ள (ம்+உ===> உ)

வகை 2: ”ம்” ஐத் தொடர்ந்து க, ச, த, ம, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:

  1. க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம் ===> ங்
  2. ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம் ===>ஞ்
  3. த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம் ===> ந்

என்றவாறு திரியும்

எ+கா:

  • சாபம்+கேள் = சாபங்கேள் (ம்===>ங்)
  • சாபம் + செய் = சாபஞ்செய் (ம்===>ஞ்)
  • அறிமுகம் +தேவை =அறிமுகந்தேவை (ம்===>ந்)

வகை 3: ”ல்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:

  1. க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் ===> ற்
  2. ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் ===>ற்
  3. ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் ===>ற்
  4. த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்த்===>ற்ற்
  5. monosylable சொல்லுக்கு பின்னர் (எ+கா: அல், கல், பல்) த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்த்===>ஃற்
  6. monosylable சொல்லுக்கு பின்னர் ம வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்===>ன்
  7. monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம்ந்===>ன்ன்

என்றவாறு திரியும்.

எ+கா:

  • முதல் +காட்சி= முதற்காட்சி
  • பதில் +சொல் =பதிற்சொல்
  • முதல் + பக்கம் = முதற்பக்கம்
  • கடல் +திரை =கடற்றிரை (ல்+தி ==>ல்+த்+இ ==>ற்ற்+இ ===>ற்றி)
  • அல்+ திணை=அஃறிணை ( monosylable ல்+தி ==>ல்+த்+இ ==>ஃற்+இ ===>ஃறி)
  • கல்+ மலை = கன்மலை ( monosylableல்===>ன்)
  • கல்+நெஞ்சு =கன்னெஞ்சு (monosylable ல்+நெ ==> ல்+ந்+எ ==> ன்ன்+எ ===> ன்னெ)

வகை 4: ”ள்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த, ம, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:

  1. க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் ===> ட்
  2. ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் ===> ட்
  3. ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் ===> ட்
  4. த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்த்===> ட் அல்லது ள்த்===>ட்ட்
  5. monosylable சொல்லுக்கு பின்னர் த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்த்===>ஃட்
  6. monosylable சொல்லுக்கு பின்னர் ம வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்===>ண்
  7. monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம்ந்===>ண்ண்

என்றவாறு திரியும்.

எ+கா:

  • திருநாள் +கடன்= திருநாட்கடன் (ள்===>ட்)
  • மக்கள்+சார்பு=மக்கட்சார்பு (ள்===>ட்)
  • உள்+புறம்=உட்புறம் (ள்===>ட்)
  • நாள் தோறும் =நாடோறும் (ள்தோ==>ள்+த்+ஓ==>ட்+ஓ===>டோ)
  • முள்+தீது =முஃடீது (monosylable ள்தீ==>ள்+த்+ஈ==>ஃட்+ஈ===>ஃடீ)
  • முள்+முடி=முண்முடி (monosylable ள்===>ண்)
  • முள்+நிலம்=முண்ணிலம் (monosylable ள்நி==>ள்+ந்+இ==>ண்ண்+இ===>ண்ணி)

வகை 5: ”ண்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:

  1. க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண் ===> ட்
  2. ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண் ===> ட்
  3. ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண் ===> ட்
  4. த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: த்===> ட் அல்லது ண்த்===>ட்ட்
  5. monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண்ந்===>ண்ண்

எ+கா:

  • மண்+காப்பு=மட்காப்பு (ண் ==>ட்)
  • இளமைக்கண்+செல்வம்=இளமைக்கட்செல்வம் (ண்===>ட்)
  • மண் + பாத்திரம் =மட்பாத்திரம் (ண்===>ட்)
  • மண் + தலம் =மண்டலம் (ண்த==>ண்த்+அ==>ண்ட்+அ===>ண்ட)
  • கண்+ நீர்=கண்ணீர் (ண்நீ==> ண்+ந்+ ஈ ==>ண்ண்+ஈ===>ண்ணீ)

வகை 6: ”ன்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:

  1. க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன் ===>ற்
  2. ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன் ===>ற்
  3. ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன் ===>ற்
  4. த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: த்===> ற் அல்லது ன்த்===>ற்ற்
  5. monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன்ந்===>ன்ன்
  • பொன்+கொல்லன் =பொற்கொல்லன் (ன்கொ===>ற்கொ)
  • பொன்+சட்டி =பொற்சட்டி (ன்ச===>ற்ச)
  • பொன்+பாதம்=பொற்பாதம்(ன்பா===>ற்பா)
    • பலன்+தந்தான்= பலன்றந்தான் (ன்த===>ன்+த்+அ==>ன்ற்+அ===>ன்ற)
    • பொன்+தகடு=பொற்றகடு (ன்த==>ன்+த்+அ==>ற்ற்+அ===>ற்ற)
  • முன்+நிலை=முன்னிலை (ன்நி==>ன்+ந்+இ==>ன்ன்+இ===>ன்னி)

வகை 7: ”உ” வில் முடிவடியும் சொற்கள் சில உரிச்சொல்லாக மாற்றப்படும் போது ”உ” “ஐ” ஆக திரியும். இதன் போது  ”உ”விற்கு முன்னதாக வரும் மெல்லினம் சிலவேலை மாற்றப்படும்.

  • பண்டு===> பண்டை
  • இன்று +நாள்===>இற்றைநாள்
  • அன்று +பாடு ===>அன்றைப்பாடு

பயன்படுத்திய நூல்

யப்பானில் பொது குளியலறைகள் மக்களைக் கவரும் முக்கிய உல்லாசப்பிரயான மாறும் சுகாதார அம்சமாகும். யப்பானில் காணப்படும் பொதுக்குளியலரைகளை அங்கு பயனப்டுத்தப்படும் நீரின் மூலத்தையும்  நீரை வெப்பமாக்க பயனபடுத்த படும் சக்தி மூலத்தையும் கொண்டு இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.  ஆறு, நிலத்தடி நீர், குழாய் நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி விறகு அல்லது மின்சாரத்தைக் கொண்டு வெப்பமாக்கப்படும் குளியலரைகள் “சென்ட்டோ” எனப்படுகின்றன.  எரிமலைகளின் அடிவாரங்களில் காணப்படும் வெந்நீர் ஊற்றுக்களைப் பயன்படுத்தும் குளியலரைகள் “ஒன்சென்” எனப்படுகின்றன. சென்டோ, ஒன்சென் என்பன இரண்டுமே யப்பனிய மக்களை கவர்ந்த அம்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. இந்த பதிவின் நோக்கம் சென்டோ எனப்படும் பொதுகுளியலறை வகையை அறிமுகப்படுத்துவதாகும்.  ஒன்சென் தொடர்பாக வேறு பதிவு சீக்கிரம் எழுதப்படும்.

சென்ட்டோ (sentō) அறிமுகம்

சென்ட்டோக்கள் நாளாந்தப் பாவனைக்குப் பயனபடுத்தப்படுவதாக இருகின்றன. இவை இந்தியவின் பௌத்த ஆலயங்களில் காணப்பட்ட குளியலரைகளில் தொடக்கத்தைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து சீனா ஊடாக கி.பி. 710-784 அளவில் இது யப்பானுக்கு பரவியது. சென்ட்டோக்கள் பொதுவாக பால் அடிப்படையில் உயரமான சுவரொன்றால் பிரிக்கப்பட்ட பெரிய அறையொன்றைக் கொண்டிருக்கும். இரண்டுப் பகுதிகளிலும் பாவனையாளர்கள் தமது உடைகளை கழைந்து பாதுகாப்பாக வைக்க மற்றும் குளியல் முடித்து தம்மை அழங்கரித்துக் கொள்ள அறையொன்றுக் காணப்படும். இதையொட்டியதாக அடுத்ததாக குளியலறை அமைந்திருக்கும், ஆண் பெண் பாலாருக்குமான இரண்டுப் பகுதிகளிலும் குளியலறைகளில் பாவனையாளர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் வரிசையாக அமைக்கப்பட்ட குழாய்களும் சுத்தமான வென்நீர் அடங்கிய தாங்கிகளும் காணப்படும். உடைகளை கழைந்த பாவனையாளர்கள் ஒரு சிறிய துவாயையும், சவர்காரம் போன்றவற்றை மட்டுமே குளியலறைக்கு கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர். குளியலறையின் குழாய்கள் தாழ்வாக (3-4 அடி உயரம்)  அமைக்கப்பட்டிருப்பதோடு இவற்றுக்கு நேராக சிறிய ஆசனங்களும் காணப்படும். ஆசனங்களில் அமர்ந்தவாறு தம்மை சீராக சுத்தப்படுத்திக் கொண்ட பாவனையாளர்கள் வெந்நீர் தாங்களில் இறங்குவர். இங்கே தலை மட்டும் வெளியே தெரியத் தக்கதாக வெந்நீரில் மூழ்கி இருப்பர். இதன் போது பயன்படுத்தப்படும் துவாய் நீருள் இடப்படுவது தாங்கியின் நீரை அசுத்தப்படுத்துவதாக கருதுவதால் அதை தலைக்கு மேல் வைத்துக்கொள்ளலாம் அல்லது தாங்கியின் விளிம்பில் வைக்கலாம். வெந்நீரில் இருந்தது போதுமானது என்க்கருதும் போது நீரை விட்டு வெளியேரி குழாய்களில் தம்மை சுத்தப்படுத்திக் கொண்டு உடைகள் வைக்கப்பட்ட அறைக்குச் செல்லாம்.

சுகாதாரம்

இக்குளியலறைகள் பல நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைகின்றன. சீராக சுத்தப்படுதிக் கொள்ளாத பாவனையாளர்கள் சுத்தாமான நீரைக் கொண்ட தாங்கியில் இறங்குவதன் மூலம் சுகாதார பிரச்சினகள எழுக்கூடும். மேலும் பரவும் நோய்களைக் கொண்டவர்கள் இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் அந்நோய்கள் பரவலாம்.

கவனிக்க வேண்டியவை

  1. சுத்தமான நீர் தாங்கியில் இறங்குமுன்னர் சவர்காரம் மற்றும் நீர்க் கொண்டு தம்மை சீராக சுத்தபடுத்திக் கொள்ளல்.
  2.  துவாயை சுத்தமான நீர் தாங்கியில் இடாமல் பார்த்துக் கொள்ளல்.
  3. குளியலறையில் மெதுவாக உரையாடல்.
  4. சுத்தமான நீர் தாங்கியில் நீர் கேளிக்கைகளில் ஈடுப்படக்கூடாது.
  5. உடைகளை அணிந்துக் கொண்டு சுத்தமான நீர் தாங்கியில் இறங்கக்கூடாது.

ஏனையவை

  1. சில யப்பனிய பொதுக் குளியலறைகள் வெளிநாட்டவரை அனுமதிப்பதில்லை.
  2. பச்சைக் குத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
  3. மதுபான அருத்தியிருப்பின் சிலவேலை அனுமதி மறுக்கப்படும்.

யப்பானின் வட மாகாணமான ஒக்கைடோவின் தலை நகரம் சப்போரோவில் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் குளிர்கால கொண்ட்டாம் நடைபெற்று வருகின்றது. பனிசிற்பங்கள் இக்கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாகும். இது நகரின் மையப்பகுதிகளான ஓதோரி, சுசுகினோ என்னும் பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஓதோரி என்பது ஒரு பூங்காவாகும் சுசுகினோ நகரின் வர்த்தக மையமாகும். இது யப்பானின் மிகப்பெரிய குளிர்கால கொண்டாட்டங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டின் 58வது குளிர்கால கொண்ட்டாட்டத்தின் போது 2 மில்லியன் பேர் இதைக் கண்டு களித்தாக கணக்கிடப்பட்டுள்ளது.


இக்கொண்டாத்தின் போது நூற்றுக்கணக்கான சிலைகள் பனிக்கட்டியால் செய்யப்பட்டு ஒதோரி, சுசுகினோ பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். வெளிநாடுகளிலிருந்தும் பல குழுக்கள இக்கொண்ட்டாட்டத்தில் பங்கு கொள்வது வழக்கமாகும். 1974 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டவருக்கான பனிசிற்பப் போட்டி கொண்டாட்டத்தின் அங்கமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 14 வெளிநாட்டு அணிகள் பங்கு பற்றின. (வெற்றியை தாய்லாந்து அணி பெற்றுக் கொண்டது)

கொண்ட்டாட்டத்தின் போது செதுக்கப்படும் பனிச்சிற்பங்களின் கருப்பொருட்கள் பலவாரானவை. பொதுவாக பிரசித்தமான கட்டிடங்கள், மனிதர்கள் போன்றவை கருப்பொருளாக காணப்படும். ஒவ்வொரு ஆண்யும் சுமார் 400 பனிச்சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்படும் இதில் 300க்குமதிகமானவை ஓதோரியில் காணப்படும். இரவில் இச்சிற்பங்கள் ஒளியூட்டப்பட்டுக் காணப்படும்.

இக்கொண்டாட்டம் 1950 ஆம் ஆண்டு 6 சிலைகளுடன் 6 பாடசாலை மாணவர்களால் தொடங்கப்பட்டது. 1955 ஆண்டு சப்போரோ நகருக்கு அருகிலுள்ள மகோமனாய் தளத்தைச் சேர்ந்த யப்பானிய தற்காப்புப் படையினரும் இதில் இணைந்துக் கொண்டனர். யப்பானிய தற்காப்புப் படையினர் கொண்டாட்டத்தில் பாரிய அளவிலான பனிச் சிற்பங்களைச் செய்யத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போர்க்காலத்தை தவிர்த்து இக்கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. பனி குறைவான ஆண்டுகளில் யப்பானிய தற்காப்புப் படையினர் வேறு இடங்களிலிருந்து பனியை கொண்டுவந்து சிற்பங்களைச் செய்ய உதவுகிறார்கள்.

ஓதோரி, சுசுகினோ தவிர்ந்த சுடாலண்ட் என்ற இடத்திலும் பனிச் சிற்பன்பங்கள் செய்யப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கு விளையாடும் இடங்களை அமைத்துக் கொடுக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கும்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது நேர்முக நிகழ்ச்சிகளை நடாத்த பனியால் மேடைகளை அமைத்து அங்கிருந்து நிகழ்ச்சிகளை ஒளிஒலிபரப்புகின்றன. இதை தவிர உணவகங்கள், கால்களுக்கு வெந்நீர் குளியல் என்பனவும் இங்கே காணப்படும்.