நான் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கைத் தமிழன். பிறந்தது இலங்கையின் மத்திய மலைநாட்டில் நாவலப்பிட்டி என்ற சிறிய நகரத்தில். வீட்டில் மூத்த ஆண்பிள்ளை எனக்கு கீழ் மூன்று இளைய சகோதரிகள். தந்தையார் இலங்கை அரச பெருந்தோட்டத்தில் தலைமை குமாஸ்தாவாக வேலை செய்தார். இரண்டு ஆண்டுக்கொருமுறை கட்டாயம் இடமாற்றம் உண்டு
. இதனால் புரட்டாசி, கம்பளை, களுத்துறை, இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்டை, தலவாக்கலை, நாவலப்பிட்டி, மீண்டும் இரத்தினபுரி, தற்போது கொழுபிற்கருகில் வத்தளை என இலங்கையின் பல இடங்களிலும் வசித்ததுண்டு.
2005 முதல் மேற்படிப்புக்காக யப்பான் வந்திருக்கன். இப்ப யப்பனில பொறியியல் முதுமானி பட்டத்துக்காக படித்துக் கொண்டிருக்கிறன். இணையத்துள விக்கிப்பீடியாவுல எழுதுறன். விக்சனரியில கருத்துக் கந்தசாமியா இருக்கிறன். தமிழைத் தவிர ஆங்கிலம், சிங்கள மொழிகள் அத்துபடி. யப்பானிய மொழி ஓரளவிற்குத் தெரியும். வலைப்பதிவு செய்ய சரியான தளத்தை தேடியதுள வேட் பிரஸ் நல்லதா பட்டதால இங்க வந்துட்டன். இங்க பெரும்பாலும் யப்பானை பற்றிதான் எழுதுவதா உத்தேசம் வேற தலைப்புகளும் வரலாம்.
பூர்வீகம்
தமிழ் நாட்டில் பூர்வீகம் கோயம்புத்தூர் பக்கம். அப்பா வழியில் எனது பூட்டா தான் இலங்கைக்கு முதலில் வந்துள்ளார். தேயிலைத் தோட்டங்களிற்கு தமிழ்நாட்டிலிருந்து வேலையாட்களை கொண்டு வருவது அவரது வேலை. அப்படி கொண்டுவரப்பட்ட ஒரு பெண் வேலையாளை மணமுடித்துக் கொண்டு இலங்கையிலேயா தங்கிவிட்டார் (இது பெரும்பாலும் 1900-1910 ஆக இருக்கலாம்). தாய் வழியிலும் 1900-1910 அளவில் எனது அம்மாவின் தாத்தாவும் பாட்டியும் இலங்கை வந்து கம்பளைக் கருகில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அவர்கள் இந்தியாவில் இந்துக்களாக இருந்தனர். இலங்கை வந்ததிலிருந்து கத்தோலிக்கராகிவிட்டனர். கத்தோலிக்கராக மாறிமையால் இலங்கை வந்தனரா அல்லது இலங்கை வருவதை இலகுப் படுத்திக் கொள்ள கத்தோலிக்கரானார்களா தெரியவில்லை.
1983 யூலை கலவரத்துக்குப் பின்னர் எனது நீட்டப்பட்ட குடும்பத்தில் கூடுதலானவர்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாடு திரும்பிவிட்டார்கள்.ஏனோ எனது குடும்பம் மட்டும் இலங்கையிலேயே இருந்து விட்டது. என்னை சிறுவயதில் தூக்கி வளர்த்த் அப்பம்மா, பெரியப்பா மகன் ஆகியோரை எனக்கு நினைவுத் தெரிந்தப் பிறகு பார்த்ததே கிடையாது.

ஹாய் மச்சான்,
உன்னுடைய வலைப்பதிவு மிகவும் நன்றாக இருக்கிடா…தொடர்ந்து உன்னுடைய வலைப்பதிவு இணயதளத்தில் வலம் வர என்னுடைய வாழ்த்துக்கள்டா.
இப்படிக்கு,
சிதா.
Good Job.
keep it up
thank you minhaj