மே 9, 2008 ஆல் டெ. ரெங்கராசு
சப்போரோ, யப்பான் 2008:ஐனு நெகி யென்றால் ஒருவகை கீரை வெள்ளைப்பூடுக் குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியற் பெயர் Allium victorialis subsp. platyphyllum என்பதாகும். இங்கே சென்று பார்தால் இதன் படிமத்தைக் காணலாம். இது குளிர்பருவம் முடிவடைந்தவுடன் மலைகளில் தோன்றும் நிலத்தடியில் காணப்படும் கிழங்கு மூலமாக இனத்தைப் பரப்புகின்றன.யப்பனிய மொழியில் நெகி என்றால் வெங்காயம் எனப்பொருள்படும் ஐனு என்பது இங்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியினராவர்
ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை 26 ஆம் நாள் இங்கே ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் 4 பேர் யப்பனியகள் மூவருடன் இணைந்த்து மலையில் வளரும் ஐனு நெகி எனப்பட்ட ஒருவகை கீரையை பறிக்க சென்றோம். யப்பானின் 4 முக்கிய தீவுகளில் ஆகவும் வடக்காக அமைந்துள்ள ஒக்கைடோ தீவு கிட்டத்தட்ட இலங்கைத் தீவின் அளவைக் கொண்டதாகும். தீவு மக்கள் செறிவு குறைந்தது இங்கு காணப்படும் குளிர் காலநிலை இதற்கு முக்கிய காரணமாகும். இதன் தலை நகரம் சப்போரோ இங்கிருந்து தான் எமது பயணம் தொடங்கியது. சுமார் 2 மணித்தியால பயணத்தின் பின்னர் சுசுட்சு என்பட்ட சிறிய கடலோர கிரமாத்தை அடைந்தோம். அங்கிருந்து சிறு தூரம் தீவுக்குள்ளாகச் செல்ல ஏறவேண்டிய மலை வந்தாகியது.
முதலில் மலையுள் செல்லும் போது இலகுவாகத்தான இருந்தது…ஓரளவிற்கு மெதுவான ஏற்றம் சிறிய பாதையொன்றும் காணப்பட்டது.

மலைன்னு சொன்னாங்க ஒன்னையும் கானோம்…
சிறிது தூரம் சென்றவுடன் அண்மையில் கரடிகள் ஏதுமிருப்பின் அவற்றை துரத்திவிடுவதற்கு வெடி கொழுத்தி போட்டார் எங்களுடன் வந்த யப்பானியர் ஒருவர். காட்டிற்குள் தைரிமாக போனதே இந்த யப்பானியர் இருக்கும் நம்பிக்கையில் தான். உள்ளே சென்றதும் தான் சொன்னா அவர் அன்று அவர் தனது வேட்டை துப்பாக்கியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்த விதயத்தை. :-().

கரடி வரும் கவனம்!!!!!!!
சிறுகசிறுக காட்டிற்குள் சென்றவுடன் பாதையும் இல்லமலேயே போனது…. மிகக் கடினப்பட்டு ஏற்வேண்டியதாயிற்று. ஒருவருமே பொருத்தமான உடைகளை அணிந்து வந்திருக்கவில்லை இது எமது பயணத்தை மேலும் கடிமாக்கியது.

நண்பர் இலக்கினேசுவரன் கடினமான மலைப்பாதையில் ஏறும் காட்சி
மிகச் சரிவான மலையில் சிறு தூரம் ஏறியதுமே ஐனு நெகி எனப்பட்ட கீரையை காணக்கூடியதாக இருந்தது. ஏற்கணவே கொண்டுவந்திருது சிறு கத்திகளால் அவற்றை வெட்டி பாலிதீன் பைகளில் சேகரிக்க தொடங்கினோம்.சுமார் ஒரு மணித்தியாலம் அளவு அங்குமிங்குமாக பரவிக் கிடந்த ஐனு நெகியை சேகரித்த பின்னர். மறுபடியும் எமது ஊர்திக்கு திரும்பினோம். அன்றிரவு உணவில் ஐனு நெகியை உண்டு மகிழ்ந்தோம்.

ஐனு நெகி பறிப்பில் ஈடுபட்ட குழுவினர். பறித்த ஐனு நெகியுடன்

ஐனு நெகி சமைக்கப்படுகிறது (பச்சை நிறத்திலிருப்பது)
ஜப்பான் இல் பதிவிடப்பட்டது | மறுமொழி இல்லை »
மார்ச் 18, 2008 ஆல் டெ. ரெங்கராசு
நான் தமிழ் இலக்கண விதிகளை மீள படிக்கத் தொடங்கிய வேலை எடுத்த சுறுக்கக் குறிப்புகளை தொகுத்து தருகிறேன். பிழைகள் காணப்படலாம் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். தமிழ் இலக்கணத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான திரிதல் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு.
வகை 1: முன்வரும் சொல் மெய்யெலுழுத்தில் முடிந்து அடுத்தச் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால்:
கடைசி மெய்யெழுத்து + முதல் உயிரெலுத்து=உயிர்மெய் என்றவாறு உயிர் மெய்யெழுத்து உருவாகும். இரண்டு சொற்களும் இணையும்.
எ+கா:
- மெய் + எழுத்து = மெய்யெழுத்து (ய்+எ===> யெ)
- கோபம் + உள்ள = கோபமுள்ள (ம்+உ===> உ)
வகை 2: ”ம்” ஐத் தொடர்ந்து க, ச, த, ம, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:
- க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம் ===> ங்
- ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம் ===>ஞ்
- த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம் ===> ந்
என்றவாறு திரியும்
எ+கா:
- சாபம்+கேள் = சாபங்கேள் (ம்===>ங்)
- சாபம் + செய் = சாபஞ்செய் (ம்===>ஞ்)
- அறிமுகம் +தேவை =அறிமுகந்தேவை (ம்===>ந்)
வகை 3: ”ல்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:
- க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் ===> ற்
- ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் ===>ற்
- ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் ===>ற்
- த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்த்===>ற்ற்
- monosylable சொல்லுக்கு பின்னர் (எ+கா: அல், கல், பல்) த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்த்===>ஃற்
- monosylable சொல்லுக்கு பின்னர் ம வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்===>ன்
- monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம்ந்===>ன்ன்
என்றவாறு திரியும்.
எ+கா:
- முதல் +காட்சி= முதற்காட்சி
- பதில் +சொல் =பதிற்சொல்
- முதல் + பக்கம் = முதற்பக்கம்
- கடல் +திரை =கடற்றிரை (ல்+தி ==>ல்+த்+இ ==>ற்ற்+இ ===>ற்றி)
- அல்+ திணை=அஃறிணை ( monosylable ல்+தி ==>ல்+த்+இ ==>ஃற்+இ ===>ஃறி)
- கல்+ மலை = கன்மலை ( monosylableல்===>ன்)
- கல்+நெஞ்சு =கன்னெஞ்சு (monosylable ல்+நெ ==> ல்+ந்+எ ==> ன்ன்+எ ===> ன்னெ)
வகை 4: ”ள்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த, ம, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:
- க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் ===> ட்
- ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் ===> ட்
- ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் ===> ட்
- த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்த்===> ட் அல்லது ள்த்===>ட்ட்
- monosylable சொல்லுக்கு பின்னர் த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்த்===>ஃட்
- monosylable சொல்லுக்கு பின்னர் ம வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்===>ண்
- monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம்ந்===>ண்ண்
என்றவாறு திரியும்.
எ+கா:
- திருநாள் +கடன்= திருநாட்கடன் (ள்===>ட்)
- மக்கள்+சார்பு=மக்கட்சார்பு (ள்===>ட்)
- உள்+புறம்=உட்புறம் (ள்===>ட்)
- நாள் தோறும் =நாடோறும் (ள்தோ==>ள்+த்+ஓ==>ட்+ஓ===>டோ)
- முள்+தீது =முஃடீது (monosylable ள்தீ==>ள்+த்+ஈ==>ஃட்+ஈ===>ஃடீ)
- முள்+முடி=முண்முடி (monosylable ள்===>ண்)
- முள்+நிலம்=முண்ணிலம் (monosylable ள்நி==>ள்+ந்+இ==>ண்ண்+இ===>ண்ணி)
வகை 5: ”ண்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:
- க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண் ===> ட்
- ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண் ===> ட்
- ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண் ===> ட்
- த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: த்===> ட் அல்லது ண்த்===>ட்ட்
- monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண்ந்===>ண்ண்
எ+கா:
- மண்+காப்பு=மட்காப்பு (ண் ==>ட்)
- இளமைக்கண்+செல்வம்=இளமைக்கட்செல்வம் (ண்===>ட்)
- மண் + பாத்திரம் =மட்பாத்திரம் (ண்===>ட்)
- மண் + தலம் =மண்டலம் (ண்த==>ண்த்+அ==>ண்ட்+அ===>ண்ட)
- கண்+ நீர்=கண்ணீர் (ண்நீ==> ண்+ந்+ ஈ ==>ண்ண்+ஈ===>ண்ணீ)
வகை 6: ”ன்” ஐத் தொடர்ந்து க, ச, ப, த, ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்:
- க வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன் ===>ற்
- ச வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன் ===>ற்
- ப வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன் ===>ற்
- த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: த்===> ற் அல்லது ன்த்===>ற்ற்
- monosylable சொல்லுக்கு பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன்ந்===>ன்ன்
- பொன்+கொல்லன் =பொற்கொல்லன் (ன்கொ===>ற்கொ)
- பொன்+சட்டி =பொற்சட்டி (ன்ச===>ற்ச)
- பொன்+பாதம்=பொற்பாதம்(ன்பா===>ற்பா)
-
- பலன்+தந்தான்= பலன்றந்தான் (ன்த===>ன்+த்+அ==>ன்ற்+அ===>ன்ற)
- பொன்+தகடு=பொற்றகடு (ன்த==>ன்+த்+அ==>ற்ற்+அ===>ற்ற)
- முன்+நிலை=முன்னிலை (ன்நி==>ன்+ந்+இ==>ன்ன்+இ===>ன்னி)
வகை 7: ”உ” வில் முடிவடியும் சொற்கள் சில உரிச்சொல்லாக மாற்றப்படும் போது ”உ” “ஐ” ஆக திரியும். இதன் போது ”உ”விற்கு முன்னதாக வரும் மெல்லினம் சிலவேலை மாற்றப்படும்.
- பண்டு===> பண்டை
- இன்று +நாள்===>இற்றைநாள்
- அன்று +பாடு ===>அன்றைப்பாடு
பயன்படுத்திய நூல்
தமிழ் இலக்கணம் இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
மார்ச் 10, 2008 ஆல் டெ. ரெங்கராசு
யப்பானில் பொது குளியலறைகள் மக்களைக் கவரும் முக்கிய உல்லாசப்பிரயான மாறும் சுகாதார அம்சமாகும். யப்பானில் காணப்படும் பொதுக்குளியலரைகளை அங்கு பயனப்டுத்தப்படும் நீரின் மூலத்தையும் நீரை வெப்பமாக்க பயனபடுத்த படும் சக்தி மூலத்தையும் கொண்டு இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஆறு, நிலத்தடி நீர், குழாய் நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி விறகு அல்லது மின்சாரத்தைக் கொண்டு வெப்பமாக்கப்படும் குளியலரைகள் “சென்ட்டோ” எனப்படுகின்றன. எரிமலைகளின் அடிவாரங்களில் காணப்படும் வெந்நீர் ஊற்றுக்களைப் பயன்படுத்தும் குளியலரைகள் “ஒன்சென்” எனப்படுகின்றன. சென்டோ, ஒன்சென் என்பன இரண்டுமே யப்பனிய மக்களை கவர்ந்த அம்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. இந்த பதிவின் நோக்கம் சென்டோ எனப்படும் பொதுகுளியலறை வகையை அறிமுகப்படுத்துவதாகும். ஒன்சென் தொடர்பாக வேறு பதிவு சீக்கிரம் எழுதப்படும்.
சென்ட்டோ (sentō) அறிமுகம்
சென்ட்டோக்கள் நாளாந்தப் பாவனைக்குப் பயனபடுத்தப்படுவதாக இருகின்றன. இவை இந்தியவின் பௌத்த ஆலயங்களில் காணப்பட்ட குளியலரைகளில் தொடக்கத்தைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து சீனா ஊடாக கி.பி. 710-784 அளவில் இது யப்பானுக்கு பரவியது. சென்ட்டோக்கள் பொதுவாக பால் அடிப்படையில் உயரமான சுவரொன்றால் பிரிக்கப்பட்ட பெரிய அறையொன்றைக் கொண்டிருக்கும். இரண்டுப் பகுதிகளிலும் பாவனையாளர்கள் தமது உடைகளை கழைந்து பாதுகாப்பாக வைக்க மற்றும் குளியல் முடித்து தம்மை அழங்கரித்துக் கொள்ள அறையொன்றுக் காணப்படும். இதையொட்டியதாக அடுத்ததாக குளியலறை அமைந்திருக்கும், ஆண் பெண் பாலாருக்குமான இரண்டுப் பகுதிகளிலும் குளியலறைகளில் பாவனையாளர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் வரிசையாக அமைக்கப்பட்ட குழாய்களும் சுத்தமான வென்நீர் அடங்கிய தாங்கிகளும் காணப்படும். உடைகளை கழைந்த பாவனையாளர்கள் ஒரு சிறிய துவாயையும், சவர்காரம் போன்றவற்றை மட்டுமே குளியலறைக்கு கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர். குளியலறையின் குழாய்கள் தாழ்வாக (3-4 அடி உயரம்) அமைக்கப்பட்டிருப்பதோடு இவற்றுக்கு நேராக சிறிய ஆசனங்களும் காணப்படும். ஆசனங்களில் அமர்ந்தவாறு தம்மை சீராக சுத்தப்படுத்திக் கொண்ட பாவனையாளர்கள் வெந்நீர் தாங்களில் இறங்குவர். இங்கே தலை மட்டும் வெளியே தெரியத் தக்கதாக வெந்நீரில் மூழ்கி இருப்பர். இதன் போது பயன்படுத்தப்படும் துவாய் நீருள் இடப்படுவது தாங்கியின் நீரை அசுத்தப்படுத்துவதாக கருதுவதால் அதை தலைக்கு மேல் வைத்துக்கொள்ளலாம் அல்லது தாங்கியின் விளிம்பில் வைக்கலாம். வெந்நீரில் இருந்தது போதுமானது என்க்கருதும் போது நீரை விட்டு வெளியேரி குழாய்களில் தம்மை சுத்தப்படுத்திக் கொண்டு உடைகள் வைக்கப்பட்ட அறைக்குச் செல்லாம்.
சுகாதாரம்
இக்குளியலறைகள் பல நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைகின்றன. சீராக சுத்தப்படுதிக் கொள்ளாத பாவனையாளர்கள் சுத்தாமான நீரைக் கொண்ட தாங்கியில் இறங்குவதன் மூலம் சுகாதார பிரச்சினகள எழுக்கூடும். மேலும் பரவும் நோய்களைக் கொண்டவர்கள் இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் அந்நோய்கள் பரவலாம்.
கவனிக்க வேண்டியவை
- சுத்தமான நீர் தாங்கியில் இறங்குமுன்னர் சவர்காரம் மற்றும் நீர்க் கொண்டு தம்மை சீராக சுத்தபடுத்திக் கொள்ளல்.
- துவாயை சுத்தமான நீர் தாங்கியில் இடாமல் பார்த்துக் கொள்ளல்.
- குளியலறையில் மெதுவாக உரையாடல்.
- சுத்தமான நீர் தாங்கியில் நீர் கேளிக்கைகளில் ஈடுப்படக்கூடாது.
- உடைகளை அணிந்துக் கொண்டு சுத்தமான நீர் தாங்கியில் இறங்கக்கூடாது.
ஏனையவை
- சில யப்பனிய பொதுக் குளியலறைகள் வெளிநாட்டவரை அனுமதிப்பதில்லை.
- பச்சைக் குத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
- மதுபான அருத்தியிருப்பின் சிலவேலை அனுமதி மறுக்கப்படும்.
கலாச்சாரம், ஜப்பான் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது குளியல், ஜப்பான் | மறுமொழி இல்லை »
மார்ச் 4, 2008 ஆல் டெ. ரெங்கராசு
யப்பானின் வட மாகாணமான ஒக்கைடோவின் தலை நகரம் சப்போரோவில் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் குளிர்கால கொண்ட்டாம் நடைபெற்று வருகின்றது. பனிசிற்பங்கள் இக்கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாகும். இது நகரின் மையப்பகுதிகளான ஓதோரி, சுசுகினோ என்னும் பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஓதோரி என்பது ஒரு பூங்காவாகும் சுசுகினோ நகரின் வர்த்தக மையமாகும். இது யப்பானின் மிகப்பெரிய குளிர்கால கொண்டாட்டங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டின் 58வது குளிர்கால கொண்ட்டாட்டத்தின் போது 2 மில்லியன் பேர் இதைக் கண்டு களித்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

இக்கொண்டாத்தின் போது நூற்றுக்கணக்கான சிலைகள் பனிக்கட்டியால் செய்யப்பட்டு ஒதோரி, சுசுகினோ பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். வெளிநாடுகளிலிருந்தும் பல குழுக்கள இக்கொண்ட்டாட்டத்தில் பங்கு கொள்வது வழக்கமாகும். 1974 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டவருக்கான பனிசிற்பப் போட்டி கொண்டாட்டத்தின் அங்கமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 14 வெளிநாட்டு அணிகள் பங்கு பற்றின. (வெற்றியை தாய்லாந்து அணி பெற்றுக் கொண்டது)
கொண்ட்டாட்டத்தின் போது செதுக்கப்படும் பனிச்சிற்பங்களின் கருப்பொருட்கள் பலவாரானவை. பொதுவாக பிரசித்தமான கட்டிடங்கள், மனிதர்கள் போன்றவை கருப்பொருளாக காணப்படும். ஒவ்வொரு ஆண்யும் சுமார் 400 பனிச்சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்படும் இதில் 300க்குமதிகமானவை ஓதோரியில் காணப்படும். இரவில் இச்சிற்பங்கள் ஒளியூட்டப்பட்டுக் காணப்படும்.
இக்கொண்டாட்டம் 1950 ஆம் ஆண்டு 6 சிலைகளுடன் 6 பாடசாலை மாணவர்களால் தொடங்கப்பட்டது. 1955 ஆண்டு சப்போரோ நகருக்கு அருகிலுள்ள மகோமனாய் தளத்தைச் சேர்ந்த யப்பானிய தற்காப்புப் படையினரும் இதில் இணைந்துக் கொண்டனர். யப்பானிய தற்காப்புப் படையினர் கொண்டாட்டத்தில் பாரிய அளவிலான பனிச் சிற்பங்களைச் செய்யத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போர்க்காலத்தை தவிர்த்து இக்கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. பனி குறைவான ஆண்டுகளில் யப்பானிய தற்காப்புப் படையினர் வேறு இடங்களிலிருந்து பனியை கொண்டுவந்து சிற்பங்களைச் செய்ய உதவுகிறார்கள்.
ஓதோரி, சுசுகினோ தவிர்ந்த சுடாலண்ட் என்ற இடத்திலும் பனிச் சிற்பன்பங்கள் செய்யப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கு விளையாடும் இடங்களை அமைத்துக் கொடுக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கும்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது நேர்முக நிகழ்ச்சிகளை நடாத்த பனியால் மேடைகளை அமைத்து அங்கிருந்து நிகழ்ச்சிகளை ஒளிஒலிபரப்புகின்றன. இதை தவிர உணவகங்கள், கால்களுக்கு வெந்நீர் குளியல் என்பனவும் இங்கே காணப்படும்.
ஜப்பான் இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »